விஜய் போல் இமிடேட் சந்தானம் படத்துக்கு எதிர்ப்பு
நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஜய் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து ராதாரவி, ரேகா, யோகி பாபு, மனோபாலா, சந்தானபாரதி, நமோநாராயணா, ஸ்டண்ட்சில்வா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல்பார்வை வெளியாகியிருக்கிறது. இதில், சந்தானம் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக சர்கார் படத்தின் முதல்பார்வை வெளியான போது, அதில், விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, டுவிட்டர் பக்கத்தில், இருந்து அந்தப் புகைப்படம் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதே போன்று சந்தானம் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது, விஜய்யைப் போன்று இருக்க வேண்டும் என நினைத்து சந்தானம் புகை பிடிப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள் போலும்.
அதனால் விஜய்யைப் போலவே அவருக்கும் எதிரிப்பு கிளம்பியிருக்கிறது. நடிகர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்பதற்கு மாற்றாக சந்தானம் இவ்வாறு நடித்திருப்பதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது.
அதோடு பாமக கட்சியும் இதனால் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. மற்ற நடிகர்கள் புகைபிடிப்பது போல நடித்தால் உடனே எதிர்க்கும் பாமக இப்போது அமைதியாக இருப்பது சந்தானம் சொந்தக்காரர் என்பதாலா? என்கிற கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன.











