சினிமா செய்திகள்

மணிரத்னம் படங்களில் முதன்முறையாக – பொன்னியின் செல்வன் பட ஆச்சரியம்

இயக்குநர் மணிரத்னம் அடுத்து அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவிருக்கிறார்.

சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது அது நடக்கவிருக்கிறது.

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார்
மணிரத்னம்.

அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனவாம்.

இந்தப்படத்தின். பட்ஜெட் , இதுவரை மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் என்கிற பெருமையைப் பெறவிருக்கிறதாம்.

இந்தப்படத்தின் மொத்த செலவாக இப்போது மணிரத்னம் கூறுவது 225 கோடி என்கிறார்கள்.

பெரும்பாலும் அவர் சொன்ன செலவுக்குள் படத்தை எடுத்துவிடுவார் என்பதால் இதில் மாற்றமிருக்காது என்றும் சொல்கிறார்கள்.

பட்ஜெட் விசயத்தில் ஷங்கர் எங்கோ போய்விட்டார். முருகதாஸ் கூட அதிகச் செலவில் படமெடுக்கிறார். மணிரத்னம் இப்போதுதான் இந்த இடத்துக்கு வருகிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

Related Posts