தனுஷ் விஜய்சேதுபதி பற்றிய வதந்திக்கு மறுப்பு
தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தில் தனுஷுடன் மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள்.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் விஜயசேதுபதி நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன.
அதில் எந்த உண்மையும் இல்லை என்று படக்குழுவினர் மறுத்துள்ளனர்.











