இயக்குநர் மீதான அவப்பெயரைப் போக்கிய அரவிந்த்சாமி
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.
இது டிடெக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மே 2 ஆம் தேதி சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது.
பூஜையில் படத்தின் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன்,
இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படத்தின் பூஜையில் கலந்துகொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் இயக்குநர் யு.ஆர்.ஜமீல், இயக்குநர் ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும்போதே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். அப்படியான எதிர்பார்ப்பை முதல் அறிவிப்பிலே ஏற்படுத்தியுள்ளது நடிகர் அரவிந்த்சாமி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் கூட்டணி.
படத்தின் கதையை தன் போக்கிற்கு கொண்டு செல்லாமல் ரசிகனின் ரசனை அறிந்து கொண்டு செல்லும் போது அந்தப்படம் நிச்சயம் வெற்றிக்கோட்டை அடையும். அப்படியான படமாகத் தான் இந்தப்புதிய படம் துவங்கி இருக்கிறது.
நடிகர் அரவிந்த்சாமி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றால் அந்தப்படம் கவனிக்கப் படும் படமாகத் தான் இருக்கும். டிடைக்டிவ் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தக்கதையில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
எட்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதம் துவங்க இருக்கிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீது ஆபாசப் படமெடுப்பவர் என்கிற அவப்பெயர் இருந்தது. அரவிந்த்சாமி அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் இயக்குநர் மீதான அவப்பெயர் மாறிவிட்டது என்கிறார்கள்.











