சினிமா செய்திகள்

அஜீத் தோனி ரசிகர்கள் மோதல் – வலைதளங்களில் பரபரப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தலைவராக இருக்கும் தோனி ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்பட்டு வருகிறார்.

சென்னையில் நடக்கும் ஒவ்வொருப் போட்டியிலும் ரசிகர்களின் ’தல தல’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. அந்த அளவுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் நெருக்கமான இடத்தை தோனி பெற்றுள்ளார்.

அண்மையில் ரசிகர்கள் தல என்று அழைப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பதில் அளித்த தோனி ‘ தல என்பது சென்னை ரசிகர்கள் எனக்குக் கொடுத்த செல்லப்பெயர். அதனால் அந்த பெயர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான் ‘ என உருக்கமாகப் பதில் அளித்துள்ளார்.

அத்னால அஜீத் ரசிகர்களுக்கும் தோனி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள்,

அடே அம்பி…., ரெண்டு ஸ்டேட் இல்ல இந்தியாவுக்கே தெரியும் தல.ன்னா அஜித் ஒருத்தர் தான்.., ஆந்திராவுக்கு பக்கத்துலதான் ஜார்கண்ட் ஸ்டேட் இருக்கு.,

இதுல கூத்து என்னன்னா மொத்த தமிழ்நாடும் என்னை #தல ன்னு கூப்பிடுதுன்னு தோனி சொன்னது தான். சென்னை பார்டர தாண்டி வேலூர், மதுரை, தேனின்னு போயி இத சொல்லிடாதய்யா @msdhoni.. செதச்சிருவானுங்க..

என்பது உட்பட பல்வேறு விதமாக தோனி ரசிகர்களைத் திட்டி வருகிறார்கள்.

அன்பில் அஜித் ரசிகர்களே

அஜித்த கொண்டாடுங்க வேணாங்கல, அது உங்க விருப்பம்.

ஆனா, தல பட்ட பிரச்சனைல டோனிய கீழ்த்தரமாக விமர்சிக்காதிங்க

ஏன்னா, 2ஸ்டேட் தள்ளி போனா அஜித்த யார்னே யாருக்கும் தெரியாது

ஆனா,டோனிய இந்தியா முழுசும் மட்டுமல்ல, உலகம் முழுசுமே தெரியும்!

என்று பதில் கூறிவருகிறார்கள்.

Related Posts