இந்திய ஒன்றியத்தின் முதன்மை மட்டைப்பந்து வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் இணைந்து, ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். அந்நிறுவனம் சார்பாக தயாரித்து இருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் (LET”S GET MARRIED).
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தலைவராக இருக்கும் தோனி ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்பட்டு வருகிறார். சென்னையில் நடக்கும் ஒவ்வொருப் போட்டியிலும் ரசிகர்களின் ’தல தல’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. அந்த அளவுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் நெருக்கமான இடத்தை தோனி பெற்றுள்ளார். அண்மையில் ரசிகர்கள் தல என்று அழைப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.













