அஜீத்தை நள்ளிரவில் வாழ்த்திய நயன்தாரா – ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ்த் திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் அஜித்.
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இவருடைய பலம். ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பு இருந்ததை விட பெரிய வெற்றி கொடுப்பார்.
நடிப்பைத் தாண்டி விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் அஜித். அவருக்கு இன்று 49-வது பிறந்தநாள்.
இவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்கள் #HappyBirthdayThala என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவிள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
திரைத்துறையில் நிறையப் பேர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியுடன் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் நயன்தாரா நள்ளிரவு 12.02 மணிக்கு அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டிருக்கிறார்.
இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இரவு பன்னிரெண்டு மணிக்கு உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்கின்றனர்.











