சினிமா செய்திகள்

ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படம் பற்றிய வதந்தியும் மறுப்பும்

ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

ரஜினி 167 என்று அழைக்கப்படும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது.

ஒரு மாதம் வரை அங்கே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இதற்காகப் படக்குழுவினர் மும்பை புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில், இந்தப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன.

இந்தச்செய்தியை படக்குழு மறுத்துள்ளது. அது செய்தியல்ல வதந்தி, ரஜினி 167 இல் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவில்லை என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts