September 14, 2026
Uncategorized செய்திக் குறிப்புகள்

இன்று பூசை நாளை படப்பிடிப்பு – சூர்யா 38 படம் தொடங்கியது

இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள்.

படத்தின் இசை ஜீ.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

Related Posts