முன்னணி நடிகையுடன் இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம்
அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கிவருகிறார்.
இயக்குநர் விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர் இருவரும் சுமூகமாக பேசி 2017 பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இம்முறையும் அவர் ஒரு நடிகையையே மணக்கவிருக்கிறாராம்.அந்த நடிகை சாய்பல்லவி.
விஜய் இயக்கத்தில் உருவான கரு படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே புரிதல் உருவாகி அது காதலாக மாறி திருமணம் வரை வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
விரைவில் இத் திருமணம் பற்றி அறிவிப்பார்களாம்.











