சினிமா செய்திகள் நடிகர்

சூர்யாவின் காப்பான் படம் பற்றிய புதிய செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காப்பான்’.

லைகா நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் ஆண்டனி டிவிட்டரில் கூறியிருப்பதாவது….

அடுத்து நிச்சயமாக வெற்றி பெறப்போகும் இந்தப் படங்களில் வேலை செய்தது மிக்க மகிழ்ச்சி. ‘எல்கேஜி’ (அரசியல் – மிக நகைச்சுவையான படம்), ’90 எம்.எல்’, (பெண்களை மையப்படுத்திய மிக நகைச்சுவையான படம்), ‘தேவி 2’, (குடும்பத்துக்கான, இரண்டு மடங்கு ஜாலியான படம்), ‘வாட்ச்மேன்’ (ஒரு வித்தியாசமான முயற்சி, த்ரில்லர்),’ கென்னடி க்ளப்’ (சுறுசுறுப்பான வெற்றி பெறப்போகும் படம்), ‘காப்பான்’ (விறுவிறுப்பான த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும்) சூர்யா மற்றும் கே.வி.ஆனந்தின் சிறந்த படைப்பு.

என்று ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts