அஜீத் சிவகார்த்திகேயன் மோதல் நடக்குமா?
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
இந்நிலையில், மே 1 ஆம் தேதி படம் வெளியாகும் என்று
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (பிப்ரவரி 13,2019) மாலை 7 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
இதே தேதியில் வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பிங்க் படத்தின் மொழிமாற்றுப் படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. சொன்னபடி அவர்களும் அதே தேதியில் வந்தால் முதன்முறையாக அஜீத் சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் சூழல் ஏற்படும்.











