மரகதநாணயம் ராட்சசன் வரிசையில் வரும் சத்ரு
நவீன் நஞ்சுண்டான் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சத்ரு.
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, இசை அம்ரிஷ்,
பாடல்கள் கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ,படத்தொகுப்பு பிரசன்னா.ஜி.கே, கலை ராஜா மோகன்,சண்டைப் பயிற்சி விக்கி
இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்…..
இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம்.
விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம்.ஆக்ஷன் ரொமான்ஸ் கலந்த படம்.குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. 24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்ஷன் படம். படம் மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.
இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான வெற்றிப் படங்களான மரகத நாணயம் ராட்சசன் என பார்த்துப் பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு, சத்ரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம் என்றும் கூறுகிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான்.











