சினிமா செய்திகள்

செய்த தப்பை நியாயப்படுத்தும் ஓவியா – வெளுக்கும் ரசிகர்கள்

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்திருக்கும் 90 எம் எல் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது.

அதில், ஓவியா புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளோடு பெண்கள் பேசிக்கொள்ளும் விசயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

எல்லோரும் ஓவியாவைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் போன்றோர் புகைபிடிப்பது போல் நடித்தால் தப்பு என்றால் ஓவியா நடிப்பதும் தப்புதானே என்கிறார்கள்.

அதோடு, என்னதான் வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இவ்வளவு மோசமான வசனங்கள் மற்றும் காட்சிகளை வைக்கலாமா? என்கிற விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

இவற்றிற்குப் பதிலளித்திருக்கும் ஓவியா, பழத்தை ருசிப்பதற்கு முன் விதை பற்றி முடிவு செய்யாதீர்கள், முழுப்படமும் வெளியாகும்வரை காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.

அவருடைய சமாதானத்தை ஏற்காமல் அவரைத் திட்டும் பதிவுகள் தொடர்கின்றன.

ஒரு தப்புக்கு நியாயம் சொல்லப்போய் அடுத்த தப்பைச் செய்திருக்கிறார் ஓவியா என்கிற விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.

சிலர் கடும் சொற்களில் அவரை விமர்சனம் செய்துவருகின்றனர்.

Related Posts