சிவகார்த்திகேயனின் அடுத்த பட வெளியீட்டு தேதி இதுதான்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜித்துஜில்லாடி.
ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படத்தின். முதல்பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இன்றுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத். தேதி பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்டுவிடுவது என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
ஏப்ரல் 5 ஆம் தேதி அல்லது 18 ஆம் தேதி ஆகிய இருநாட்களில் ஏதாவது ஒருநாள் இந்தப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பு படத்தின் முதல்பார்வை வெளியாகும்போது வெளியிடப்படும் என்று தெரிகிறது.











