சொன்னபடி செய்வாரா செல்வராகவன்? பயத்தில் சூர்யா ரசிகர்கள்
சூர்யா, ரகுல்பிரித்சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் என்ஜிகே .
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்ததன் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
அவற்றிற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்துவருகிறதாம்.
படப்பிடிப்பு தாமதமான காரணத்தால், வைரமுத்து எழுதிப் பதிவான இரண்டு பாடல்களை நீக்கவேண்டிதாயிற்றாம்.
அதன்பின் கபிலன், உமாதேவி ஆகியோர் அந்தப் பாடல்களை எழுதியிருக்கிறார்களாம்.
அவற்றில் கபிலன் எழுதிய பாடல்,பின்னிமில்லில் தொடர்வண்டி நிலையம் போல் ஓர் அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டதாம்.அதில், ஏராளமான துணை நடிகர்களுடன் சூர்யா கலந்துகொண்டாராம்.
இப்பாடல் காட்சியைத் தொடர்ந்து வசனக் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றனவாம்.
இம்மாத இறுதிக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறாராம் செல்வராகவன்.
சொன்னபடி முடித்துவிடுவாரா? அல்லது மேலும் நீட்டிக்கப் போகிறாரா? என்கிற பயத்தடன் இருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு.
சூர்யா ரசிகர்களும் அதே பயத்துடன் காத்திருக்கிறார்கள்.











