சினிமா செய்திகள்

அஜித் பட பூஜையில் தந்திடிவி பாண்டே கலந்துகொண்டது இதனால்தான்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் டிசம்பர் 14,2018 அன்று பூஜை போடப்பட்டது.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் பூஜையில் தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டார். படத்தில் முக்கிய வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறாராம்.அதனால் கலந்துகொண்டார் என்கிறார்கள்.

பூஜை போட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டார்கள். இரண்டுநாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.

Related Posts