சினிமா செய்திகள்

100 கோடியைத் தொட்டது 2.ஓ படம் – தமிழக வியாபாரத்தில் புதிய உச்சம்

ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டுரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது.

ஆனால் தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது.

ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை.

நேற்றும் இன்றும் தான் அவை முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

படத்தின் மொத்தச்செலவு மிகப்பெரிது என்பதால், ஒவ்வொரு விநியோகப் பகுதிக்கும் இவ்வளவு விலை என்று வைக்கமுடியாது. அப்படி வைத்தால் விலை மிக அதிகமாக இருக்கும். எனவே, ஒவ்வொரு விநியோகப்பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட முன் தொகை வாங்கிக்கொண்டு படத்திக் கொடுப்பதென்று பட நிறுவனம் முடிவு செய்திருக்கிறதாம்.

அதன்படியே விநியோகஸ்தர்களிடமிருந்து வந்த முன் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது என்று சொல்லப்படுகிறது,

இப்படத்தின் சென்னை நகர விநியோக உரிமை சத்யம் சினிமாஸ்,

செங்கல்பட்டு அருள்பதி,

வட ஆற்காடு சீனு,

தென் ஆற்காடு காளியப்பன்,

கோவை மதுரை ஆகிய இரு பெரும் பகுதிகளைப் பெற்றிருப்பவர் மதுரை அன்பு,

சேலம் செவன் ஜி சிவா,

திருநெல்வேலி கன்னியாகுமரி லட்சுமணன்

திருச்சி பகுதி இன்னும் முடிவாகாமல் இருக்கிறதாம். பெரும்பாலும் அங்கு லைகா நிறுவனமே நேரடியாகக் களமிறங்கலாம் அல்லது சுப்பையா என்பவருக்குக் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த விநியோகஸ்தர்கள் மூலம் கிடைத்த தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டதாம். தமிழ்ப் படங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமைக்காகக் கிடைத்த தொகைகளில் இதுதான் பெரிது என்றும் ரஜினி படம் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

ஆக இனிமேல் திரையரங்குகள் ஒப்பந்தம் வேகமாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts