September 18, 2021
சினிமா செய்திகள்

விக்ரம் மீது மணிரத்னம் கோபம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.

இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல்பாகத்துக்கான பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் முதல்பாகம் நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வந்துள்ளது.
இதனால் வேலைகளை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டார்கள். மணிரத்னம் அலுவலகத்துக்கும் காலவரையறையற்று விடுமுறை விட்டுவிட்டார்கள்.

அதன்பின், இதுவரை எடுத்தவற்றைத் தொகுத்துப் பார்த்த மணிரத்னம், நடிகர் விக்ரம் மேல் கோபமாகியிருக்கிறாராம்.

ஏன்?

இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே இவர்கள் கேட்ட தேதிகளை விக்ரம் கொடுக்கவில்லை. அவர் இப்போது நடித்துவரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பையொட்டியே இப்படத்துக்குத் தேதிகள் கொடுத்தாராம். கோப்ரா படமும் இன்னும் நிறைவுபெறவில்லை.

இதனால், நாம் தேதிகள் கேட்டபோது கொஞ்சம் அனுசரித்து தேதிகள் கொடுத்திருந்தால் இந்நேரம் முதல்பாகம் வெளீயீட்டுக்குத் தயாராகியிருக்கும், விக்ரமால் தாமதமானதால் மறுபடி எப்போது படப்பிடிப்பு தொடங்குவது என்று தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறோமே? என்று வருந்திக் கொண்டிருக்கிறாராம் மணிரத்னம்.

Related Posts