சினிமா செய்திகள்

அஜீத் 61 – இந்தப்படத்தின் ரீமேக்?

வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார்.

ஏகே 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்காக எச்.வினோத் சொன்ன கதைகள் எதுவும் அஜீத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் ஏதாவதொரு படத்தின் ரீமேக் ஆக எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார்களாம்.

அதன்படி அஜீத் 61 படம், ஓர் ஆங்கிலப்படத்தின் மொழிமாற்று என்று சொல்லப்படுகிறது.

பிரபல ஆங்கிலப்பட நடிகர் அல்பசினோ நாயகனாக நடித்த படம் டாக் டே ஆஃப்டர்நூன் (Dog day Afternoon).1975 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம், வங்கிக்கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட படம்.

அந்தப்படத்தின் உரிமையை வாங்கி அதைத் தமிழுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களுடன் படமாக்கவிருக்கிறார்களாம்.

ஆங்கில நடிகர் அல்பசினோ அஜீத்துக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவருடைய படங்களை மிகவும் விரும்பிப்பார்ப்பார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

அதனால்தான், ஏற்கெனவே அல்பசினோ நடித்த ஸ்கேர்ஃபேஸ் என்கிற படத்தை அப்படியே திரும்ப எடுத்தார்கள். அஜீத் நடித்த பில்லா 2 படம்தான் ஸ்கேர்ஃபேஸ் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts