பேட்ட விஸ்வாசம் படங்களால் சிறிய படம் எடுத்த அதிரடி முடிவு
மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர்.இப்போது அட்லி விஜய் இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க இருக்கிறார்.
கதிர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சிகை. அப்படத்தின் முன்னோட்டம் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனாலும் திரைக்கு வருவதற்கு உரிய நேரம் அமையாமல் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.
இதுபோன்ற சிறிய படங்களுக்கு உரிய திரையரங்குகள் கிடைக்காததே அதற்குக் காரணம்.
சனவரி 10 ஆம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன.
அந்தப் படங்களுடன் சேர்த்து கதிரின் சிகை படமும் வெளியாகவிருக்கிறது. திரையரங்குக்ளில் அல்ல இணையத்தில்…
ஜீ 5 (ZEE5 APP ) என்கிற கைபேசி செயலியில் வெளியாகிறது.
முதன்முறையாக ஒரு படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாகவே இணையத்தில் வெளியாகிறது.
இது நல்லதொரு மாற்று வழி என்று சொல்லப்படுகிறது.
மாற்றா? ஏமாற்றா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.











