சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி ரஜினியின் 2.ஓ பட கர்நாடக வியாபாரம்

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது.

சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வாட்டாள் நாகராஜ் எதிரிப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

எதிர்ப்பு சர்ச்சை ஆகியன இருந்த போதும், கர்நாடகத்தில் அப்படத்தை வெளியிடும் உரிமைக்குக் கடும் போட்டி நிலவியதாம்.

லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உட்பட பலர் போட்டி போட்டனராம். இறுதியில் பாகுபலி உள்ளிட்ட பல படங்களை வெளியிட்ட சுதீப் கர்நாடக உரிமையைப் பெற்றிருக்கிறாராம். சுமார் 20 கோடி ரூபாய்க்கு கர்நாடக உரிமை விற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வாட்டாள் நாகராஜுக்குக் கொடுக்க வேண்டியது தனி.

Related Posts