September 23, 2023
சினிமா செய்திகள்

சுசீந்திரன் இயக்கும் புதிய படம் – சுவாரசிய நடிகர் பட்டாளம்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ஒருபடம் ஆதி நடிப்பில் ஒரு படம் ஆகியன தயாராக இருக்கின்றன.

இவை சரியான வெளியீட்டுத் தேதி அமையும்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்தபடத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுசீந்திரன்.

சுசீந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில், இயக்குநர் பாரதிராஜா, ராஜ்கிரண், அருள்நிதி மற்றும் ஜெய் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்களாம்.

ஒரேபடத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் இணைந்திருப்பதற்குக் காரணம் இப்படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் பெயர் பெற்றுத்தரும் கதை என்பதால் எல்லோருமே நம்பி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம்.

இந்தப்படத்தைத் தயாரிக்கப் போவதும் சுசீந்திரன் தான் என்கிறார்கள்.

அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்துவிட்டன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts