வதந்தி பரப்பாதீர்கள் கண்ணியம் காட்டுங்கள் – புதுநடிகை ஆவேசம்
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
’96’ படத்தில் இள வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் த்ரிஷாவாக நடித்த கெளரி இருவருக்குமே பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன. இதில் கெளரிக்கு வாழ்த்து தெரிவித்து ஆதித்யா பாஸ்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சிக்கலை உண்டாக்கியது. அதில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ‘I LOVE YOU’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாக பரவி, ’96’ படத்தில் நடித்து நிஜக் காதலர்களாகிவிட்டார்கள் என்று செய்திகளும் பரவின. இது தொடர்பாக இள வயது ஜானுவாக நடித்த கெளரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதித்யா பாஸ்கரும் நானும் காதலிக்கவில்லை. ராம் மற்றும் ஜானு கதாபாத்திரங்களில் திரையில் மட்டுமே காதலர்களாக நடித்தோம், நிஜத்தில் அல்ல. தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். கண்ணியம் காட்டுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.











