சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா கொடுத்த இன்பஅதிர்ச்சி

மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது இயக்கியிருக்கும் படம் சர்வம் தாளமயம்.

இது இசை சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், ஒரு இளைஞனைப் பற்றிய கதை என்பதாலும், ஜி.வி.பிரகாஷ் படத்தின் நாயகனாகியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராஜீவ்மேன்ன் இயக்கும் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார், ஏ.ஆர்.ரகுமான்.

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில், இம்மாதம் நடைபெற்று வரும் 31-வது திரைப்பட விழாவில், ‘உலகக் கவன ஈர்ப்பு’ என்ற பிரிவின் கீழ், `இசை, நாடகம்’ என்ற வகைப்பாட்டில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்தச் செய்தி ஜீ.வி.பிரகாஷை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதைவிடப் பெரிய மகிழ்ச்சியான நிகழ்வொன்றும் நடந்திருக்கிறது.

இப்படத்தை இயக்குநர் பாலா உட்பட சிலருக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

படம் பார்த்த பாலா மிகவும் நெகிழ்ந்துபோய் படக்குழுவினரைப் பாராட்டினாராம். படத்தை இயக்கிய ராஜீவ்மேனன் காலைத் தொட்டுக் கும்பிட்டாலும் தகும் என்று பாலா கூறியதால் ராஜீவ்மேனனும் ஜீ.வி.பிரகாஷூம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.

Related Posts