சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யை விமர்சித்த நகைச்சுவை நடிகர் – திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள்.

இவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அவ்வப்போது அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக சாடி ட்வீட் செய்து வந்த நடிகர் கருணாகரன், விஜய் பேச்சை மறைமுகமாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.

விஜய் பேச்சு குறித்து “குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா. அதை அவர்கள் கேட்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. அவர்களிடம் அடுத்தவர் மீது வெறுப்பை கக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கருணாகரன்.

விஜய்யை விமர்சித்திருப்பதால், அவருடைய ரசிகர்கள் கருணாகரன் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு கடுமையாகத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts