சினிமா செய்திகள்

திடீரென கமலைப் புகழ்ந்த காயத்ரிரகுராம் – ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

அந்த நிகழ்ச்சியில், மக்களிடம் கடுமையாக திட்டு வாங்கி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார்

அப்போது பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார் காய்த்ரி.

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார்.

மேலும் நிகழ்ச்சியால் பலரும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கும் அவர் அன்பான பல வாக்குறுதிகளை அளித்தார் ஆனால் அதற்கு பின் கமல் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை ஏன் அந்த நிகழ்ச்சிக்குப் பின் எங்களை அழைத்துக் கூட அவர் பேசவில்லை. அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றவில்லை, தற்போதே அவர் முழு அரசியல்வாதி ஆகிவிட்டார் எனக் கோபமாக காயத்ரிரகுராம் பேசியிருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 30 அன்று நடந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதிநிகழ்வைப் பற்றிப் பேசியிருக்கும் காயத்ரிரகுராம் கமலைப் புகழ்ந்துள்ளார்.

எப்போதும் நீங்கள் சிறந்தவர்,மக்களின் பிரதிநிதியான உங்களுக்கு மாற்று யாரும் இல்லை.உங்களை யாரும் அசைக்கமுடியாது என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத கமல் எப்போது, எப்படி நல்லவரானார்? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Related Posts