சினிமா செய்திகள்

சர்கார் இசை வெளியீடு தாம்பரம் சென்றது ஏன்?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது.

‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த விழா எங்கு நடைபெறவிருக்கிறது என்று இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த விழா நடைபெற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பாக, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கு மற்றும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் ஆகிய இடங்களில் நடத்தத் திட்டமிட்டார்களாம்.

ஆனால் அவ்விடங்களில் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாம். சென்னைக்குள் இவ்விழா நடக்கக்கூடாது என்று முடிவு செய்து பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்ததாகச் சொல்கிறார்கள்.

இதனால் சென்னையைத் தாண்டி தாம்பரத்தில் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்களாம்.

Related Posts