ரஜினிக்கு காவல்துறை பாதுகாப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி ஹாஸ்டல் வார்டனாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.
ஒருமாதம் அங்கு படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். இதனால் உத்தரப்பிரதேச அரசு ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 காவல்துறையினரை நியமித்துள்ளதாம்.
நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் இறங்கவிருக்கும் ரஜினிக்கு பாஜக அரசு பாதுகாப்பு கொடுத்திருப்பது கவனிக்கத்தக்க விசயமாக ஆகியிருக்கிறது.











