நயன்தாராவுக்கு 50, அதர்வாவுக்கு 15 – இமைக்காநொடிகள் பஞ்சாயத்து
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா உட்பட பலர் நடித்த இமைக்கா நொடிகள் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது.
படத்துக்கு நல்ல வரவேற்பு மட்டுமல்ல நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லி, ஊடகங்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்தினார்கள்.
ஆனாலும், நயன்தாரா, அதர்வா மற்றும் இயக்குநர் உட்பட பலருக்கும் சம்பள பாக்கி இருக்கிறதாம்.
நயன்தாராவுக்கு ஐம்பது இலட்சம், அதர்வாவுக்கு 15 இலட்சம் சம்பள பாக்கி இருக்கிறதாம்.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் அதுபற்றி எந்தப்பதிலும் இல்லையாம். இதனால் படம் வெற்றி என்ற போதும் படத்தில் பணியாற்றியவர்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.









