பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகைக்கு இவ்வளவு சிக்கல்களா?
அண்மையில் திரைக்கு வந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னைப் பற்றிக் கூறியிருப்பது மிகவும் வேதனை தருவதாக இருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது…
என் வீட்டாரின் எதிர்ப்பை மீறி மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்ப் படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தேன். அதன்பிறகு சொந்த ஊருக்குச் செல்லவில்லை. எனது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியமாக இருக்கிறது. என்மீது அவர்களுக்குப் பாசம் கிடையாது. கொல்கத்தா செல்வதற்கு கையில் பணம் இருக்கிறது.
அங்கு போனாலும் குடும்பத்தினரிடம் இருந்து அன்பு கிடைக்காது. அவர்கள் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். எனது அம்மாவுக்குக் கூட எனது நலனில் அக்கறை இல்லை. அவர்கள் யாரும் என்னைப் பார்க்க வருவதும் இல்லை. போனில் எனது பிரச்சினைகள் குறித்து பேசினால் கூட காது கொடுத்துக் கேட்பது இல்லை. எனக்கு வருமானம் எப்படி வரும் என்று கூட விசாரிப்பது இல்லை.
குடும்பத்தினருக்கு மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை அனுப்பி வைப்பேன். 10–ந் தேதிக்குள் பணம் அனுப்பாவிட்டால் திட்டுவார்கள். அவர்களுக்குப் பணம் கிடைத்தால் மட்டும் போதும்
இவ்வாறு ஐஸ்வர்யா தத்தா பேசியதைக் கேட்ட அனைவரும் கலங்கினர்.ஒரு நடிகைக்குள் இவ்வளவு சோகங்களா? என்று வருந்துகின்றனர்.











