அதிகாலையில் வெளியானது அஜித் படத்தின் முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி
வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படம் ‘விஸ்வாசம்’.
இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார்.
2018 ஜனவரி மாதம் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று சொல்லி இருந்தார்கள். 2018 தீபாவளி வெளியீடாக ‘விஸ்வாசம்’ வெளிவரும் என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது.
இப்போது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு விஸ்வாசம் படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது.
அஜீத் இரண்டு தோற்றங்களில் இருக்கும் அந்த முதல்பார்வையோடு படம் 2019 பொங்கல் நாளில் படம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.











