ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்தார் ரஜினி? ஏன்?
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.
இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் மீதியும் முடிவடைந்துவிடும்.
அதற்கடுத்து ஒரு படத்தில் நடிக்க, கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம்.
இதையறிந்த ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைச் சந்தித்தாராம். கதை பற்றிய பேச்சும் நடந்திருக்கிறது. முருகதாஸ் சொன்ன கதையின் மையம் ரஜினிக்குப் பிடித்திருக்கிறது.
அதனால், அடுத்த படம் நமக்குத்தான் என்று ஆசையோடு இருந்தாராம் முருகதாஸ். அந்த ஆசையில் மண் விழுந்திருக்கிறதாம். இப்போது வேண்டாம் தேவைப்படும்போது கூப்பிடுகிறேன் என்று ரஜினி சொல்லிவிட்டதாகத் தகவல்.
ஆனால், அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தி அதிகச் செலவு செய்கிற இயக்குநர் என்கிற பெயரை முருகதாஸ் பெற்றிருப்பதாலேயே அவர் வேண்டாம் என்று ரஜினி முடிவெடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், திரைத்துறையில் எப்போதும் எதுவும் நிச்சயமில்லை.











