ராதாமோகன் விஜி கூட்டணியில் இணைந்த விக்ரம்பிரபு
விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
கலைப்புலிதாணு தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கும் புதியபடம் அறுபது வயது மாநிறம்.
இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனியும் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள்.
இளையராஜா இசையமைக்கிறார்.
2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோதி பண்ணா சாதாரண மைகட்டு என்கிற படத்தின் தமிழாக்கம்தான் இந்தப்படம் .
அழகியதீயே, மொழி,36 வயதினிலே உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதிய விஜி இந்தப்படத்துக்கு வசனங்கள் எழுதுகிறார்.
ராதாமோகன் இயக்கும் படங்களுக்கு விஜி வசனம் எழுதினால் அது நிச்சய வெற்றி என்பது ஏற்கெனவே நிரூபணம் ஆகியிருக்கிறது.
இதனால் இந்தப்படமும் நிச்சய வெற்றி என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.











