சினிமா செய்திகள் நடிகை

லாரன்ஸின் பல பக்க அறிக்கைக்கு 15 விநாடி பதில் கொடுத்த ஶ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் பெயர் குறிப்பிட்டு பலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக கூறினார்.

ஆனால் அதற்கு ஸ்ரீரெட்டி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் தனது அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருவதாக லாரன்ஸ் கூறியிருந்தார்.

லாரன்ஸின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது லாரன்ஸ் மாஸ்டருக்காக என்று அந்த காணொலிக்கு மேலே குறிப்பிட்டிருக்கிறார். அதில் லாரன்ஸ் போல் ஸ்டைல் காட்டி உள்ளார்.

லாரன்ஸ் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்து சவால் விட்டார். அதற்குப் பதிலாக 15 விநாடிகள் ஓடும் காணொலியை வெளியிட்டுள்ளார் ஶ்ரீரெட்டி.

Related Posts