சினிமா செய்திகள்

ஷங்கர்- ரஜினியின் 2 ஓ பட ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு – லைகா அதிரடி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.

படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது.

2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள்.

ஆனால் சில நாட்களாகப் படத்தின் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமற்ற பல்வேறு செய்திகள் வருகின்றன்.

இந்த ஆண்டு படம் வெளியாகாது 2019 ஆம் ஆண்டுதான் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவிருக்கிறதாம் படத்தைத் தயாரித்திருக்கும் லைகா நிறுவனம்.

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இன்று சென்னை வரவிருப்பதாகவும், அவரும் இயக்குநர் ஷங்கரும் இணைந்து நாளை 2 ஓ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ரஜினி சென்னையில் இல்லாத நேரத்தில் தேதியை அறிவிக்கலாமா? என்கிற கேள்வி இருந்ததாகவும், நான் இல்லையென்றால் தப்பில்லை தேதிதான் முக்கியம் அதைச் சொல்லிவிடுங்கள் என்று ரஜினி சொன்னதாகவும் பேச்சு இருக்கிறது.

Related Posts