சூர்யா படத்தில் ஆர்யா – கடைசி நேர அதிரடி
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23 முதல் இலண்டனில் நடந்துவருகிறது.
இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகச் சொல்லியிருந்தார் அல்லுசிரிஷ்.
ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். படத்தில் அல்லுசிரிஷ் நடிக்கவில்லையென்றும் அவருக்குப் பதிலாக நடிகர் ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
விரைவில் ஆர்யா இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் சொல்கிறார்கள்.










