டிக் டிக் டிக் வெற்றியால் சத்யராஜூக்கு பயம்?
சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்த படம் டிக் டிக் டிக்.
ஜூன் 22 ஆம் தேதி வெளியான அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு.
முதல்நாளைவிட அடுத்த நாள் வசூல் உயர்ந்தது அதற்கடுத்த நாள் இன்னும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள்.
முதல் மூன்று நாட்களில் சுமார் பனிரெண்டு கோடி வசூல் செய்திருக்கிறது என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் மிக சந்தோசமாக இருக்கிறார்களாம்.
அதே நேரம் நடிகர் சத்யராஜ். தரப்பு பயந்திருக்கிறதாம்.
இந்தப்படம் ஓடினால் அவர்கள் ஏன் பயப்படவேண்டும்?
இந்தப்படத்தை முடித்தவுடன், சிபிராஜை வைத்து நாய்கள் ஜாக்கிரதை இரண்டாம்பாகம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் அந்தப்படத்துக்கு சம்பளம் எவ்வளவு? என்பதை இந்தப்படம் வெளியானவுடன் முடிவு செய்துகொள்ளலாம் என்று பேசியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இப்போது படம் நன்றாக ஓடுவதால், இயக்குநர் சம்பளத்தை அதிகப்படுத்துவதோடு, வசதிகளையும் அதிகமாக எதிர்பார்ப்பார் என்கிற பயத்தில் இருக்கிறார்களாம்.
இன்னொரு பக்கம் எப்படியிருந்தாலும் இவரை வைத்தும் படம் தயாரித்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறதாம்.











