சினிமா செய்திகள்

சென்டிமெண்டால் பெயரை இழந்த எஸ்.ஏ.சந்திரசேகரன்

டிராபிக்ராமசாமி படத்தைத் தயாரித்து நடிக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இந்தப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விக்கி இயக்கியிருக்கிறார்.

இந்தப்படம் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அதற்காக இப்படத்தின் விளம்பரம் நாளேடுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஒரு படத்தின் விளம்பரத்தில் அப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகரின் பெயர் போட்டு இவர் நடிக்கும் படம் என்று விளம்பரம் செய்வார்கள்.

ஆனால் டிராபிக் ராமசாமி பட விளம்பரங்களில், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் என்று எழுதப்படவே இல்லை.

இதற்குக் காரணம் இருக்கிறதாம்.

படத்தின் விளம்பர வடிவமைப்பு நடந்த நேரத்தில்,எஸ்.ஏ.சி சார் பெயர் எங்கும் வேண்டாம் என்று இயக்குநர் சொல்லிவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன விளக்கம், சார் படம் போட்டு தானே விளம்பரம் செய்கிறோம் என்பதோடு நில்லாமல் சார் பெயர் போட்டால் படம் ஓடாது என்றும் சொல்லிவிட்டாராம்.

திரையுலகில் செண்டிமெண்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால் எஸ்.ஏ.சியும் அதை ஏற்றுக்கொண்டாராம்.

இதனால் பட விளம்பரங்களில் எஸ்.ஏ.சி பெயர் இடம்பெறவில்லை.

Related Posts