சினிமா செய்திகள் நடிகர்

யார் கொலைகாரன்? – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஜய்ஆண்டனி

‘காளி’படத்தைத் தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை கணேஷா என்பவர் இயக்குகிறார்.

எஸ்.ஏ சந்திர சேகரன் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இவற்றைத் தொடர்ந்து ஆண்டருலூயிஸ் இயக்கத்தில் ‘கொலைகாரன்’ எனும் படத்திலும் நடிக்கிறார்.இப்படத்தில் நடிகர் அர்ஜூன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
அவற்றை உறுதிப்படுத்தியிருக்கிறது இன்று வெளியான் கொலைகாரன் படத்தின் முதல்பார்வை.

இரும்புத்திரையில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற அர்ஜுனை, தங்கள் படத்தின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் எனக் கருதியிருக்கிறார்கள் கொலைகாரன் குழு.

எல்லோரும் வைக்கத் தயங்கும் பெயர்களைத் தன் படத்துக்கு வைத்து தனித்துவத்தைக் காட்டி வருகிறார் விஜய்ஆண்டனி.

படத்தில் கதாநாயகனுக்கு இணையான சக்திமிக்க அர்ஜூன் இருப்பதால், தலைப்புக்கு சொந்தக்காரர் யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts