அதர்வாவுக்கு உதவிய ஏ.ஆர்.முருகதாஸ்
2010 ஆம் ஆண்டு வெளியான பாணாகாத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு எட்டுப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை ஒரு பெரிய வெற்றியை அடையவில்லை.
ஆனாலும் அவருக்குப் படங்களுக்குக் குறைவில்லை. அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’, ‘100’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
இதில் செம போத ஆகாத திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
‘100’ படத்தை `டார்லிங்’ பட இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இந்தp படத்தில் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்பார்வையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.
இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறாராம் அதர்வா.











