சினிமா செய்திகள்

காலா படத்தை வெளியிட பேரம் பேசும் வாட்டாள்நாகராஜ்

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அரசியல் லாபத்துக்காகவே கன்னட மக்களுக்கு எதிராகக் குரல்கொடுத்துவருகிறார். இதனால், ரஜினியின் காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக் கூடாது. சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை திரையிட விடமாட்டோம்’ என்றார்.

இதற்கிடையில், ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் கர்நாடகாவில் வெளியிடப்படவில்லை என்று உறுதிசெய்ய வேண்டும் என கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸில் முறையிடப்பட்டுள்ளதாம்.

வெளிப்படையாக அவர் படத்தை வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுத்தாலும், எனக்கு இரண்டு கோடி பணம் கொடுத்துவிட்டுப் படத்தைத் திரையுடுங்கள் என்று திரைமறைவில் பேரம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts