சினிமா செய்திகள்

எஸ் கே 23 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் 2024 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமற்ற முறையில் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இன்று அதை அதிகாரப்பூர்வமாக சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது….

எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். படப்பிடிப்பைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாசின் பிறந்தநாள் இன்று என்பதால், அதை முன்னிட்டு இப்பட அறிவிப்பை வெளீயிட்டிருக்கிறார்கள்.

அறிவிப்பு இப்போது வெளியானாலும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்பே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Related Posts