தயாரிப்பாளர் சுதன்சுந்தரம் திருமணம் – நடிகையை மணக்கிறார்
அண்மையில் பெரியவெற்றி பெற்ற தாய்க்கிழவி,விஜய்சேதுபதி நடித்த மகாராஜா,ஹரிஷ்கல்யாண் நடித்த பார்க்கிங் உள்ளிட்ட பெருவெற்றிப் படங்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்.பேசன் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் சார்பில் இவருடைய தயாரிப்பில் அடுத்து,மிஸ்டர்பாரத்,பென்ஸ்,மை டியர் சிஸ்டர் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி இருக்கின்றன.அவை ஒவ்வொன்றாக வெளியாகவிருக்கின்றன.
இயக்குநர் ஷங்கர் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார்.
இந்நிலையில்,தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்துக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது.இவர் ஏற்கெனவே திருமணமாகி மணவிலக்குப் பெற்றவர்.இப்போது இன்னொரு திருமணம் செய்யவிருக்கிறார்.
இவர் இப்போது மணமுடிக்கவிருப்பது நடிகை சர்மிளா மண்ட்ரே.கன்னட நடிகையான இவர்,2012 ஆம் ஆண்டு வினய் கதாநாயகனாக நடித்து தமிழில் வெளியான மிரட்டல் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
அதன்பின்,தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.கன்னடம் மட்டுமின்றி தமிழிலும் திரைப்படங்கள் தயாரித்திருக்கிறார்.விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்.இதுதவிர சிலநொடிகளில்,சண்டக்காரி உள்ளிட்ட சில படங்களில் இணைதயாரிப்பு,படைப்பாக்கத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.பெங்களூருவில் நிச்சயம் நடந்திருக்கிறது.இருவரும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் அதிலும் தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
இந்தத் திருமணம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்தத் திருமணம் நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.
மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
திருமணம் முடிந்த பின்பு,சென்னையில் பெரிய அளவில்,திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மணமக்கள் நீடு வாழ்க!











