மாதம் ஐம்பது இலட்சம் கேட்ட வெங்கட்பிரபு – தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது நடக்கவில்லை.அந்தப்படத்துக்காக சில கோடிகள் செலவிட்டும் அந்தப்படம் நடக்காமல் போயிருக்கிறது.
இதனால்,சத்யஜோதி நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிப்பார் அந்தப்படத்தை வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல்,அந்நிறுவனத்துக்கு வெங்கட்பிரபு ஒருபடம் இயக்கவிருக்கிறார்.
அதற்காக,பிரதீப் ரங்கநாதனை அணுகியிருக்கிறார் வெங்கட்பிரபு.அவரும் கதை கேட்கிறேன்,ஆனால் மொத்தத் திரைக்கதையும் தயார் செய்து கொடுங்கள் அதாவது பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.இதைக் கேட்டு பேரதிர்ச்சியாகிவிட்டாராம் வெங்கட்பிரபு.நேற்று வந்த பையன் நம்மிடம் கதை கேட்கிறானே என்று நொந்துகொண்ட வெங்கட்பிரபு,பிரதீப்பை விட்டுவிட்டாராம்.
அதன்பின் அடுத்த திருப்பம்.
முதல்படத்திலேயே பெருவெற்றியில் இருக்கும் கென்கருணாசை அணுகியிருக்கிறார் வெங்கட்பிரபு.அவரும்,உங்களோடு படம் செய்வதில் மகிழ்ச்சி.ஆனா,பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.இதைச் சற்றும் எதிர்பாராத வெங்கட்பிரபு மிகவும் நொந்துவிட்டாராம்.
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே நாம என்னைக்கு பவுண்டட் ஸ்கிரிப்ட் வச்சிருதோம் என்று தனனைத் தானே சமாதானம் செய்துகொண்ட வெங்கட்பிரபு,அதேசமயம் காலம் மாறிவிட்டது நாமும் மாறித்தான் ஆகவேண்டும் என முடிவுசெய்து டம்மியாக ஒரு பவுண்டட் ஸ்கிரிப்ட் தயார் செய்ததாகச் சொல்லப்பட்டது.
இதனால்,வெங்கட்பிரபு இயக்கத்தில் கென்கருணாஸ் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது அதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
ஏன்?
இந்தப்படத்தை ஆறு மாதங்களுக்குள் முடித்துவிடுகிறேன் அதுவரை மாதம் ஐம்பது இலட்சம் எனக்குக் கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார் வெங்கட்பிரபு.
இதைக்கேட்டு தயாரிப்பு நிறுவனம் திடுக்கிட்டுவிட்டதாம்.ஏனெனில்,சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்புக்கொண்ட பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தயாரிப்பு நிறுவனத்திடம் பணம் வாங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.அப்படி வாங்கிய தொகை சுமார் ஐந்தரை கோடி என்று சொல்லப்படுகிறது.
இவ்வளவு பணத்தை வாங்கிக் கொண்டு இப்போது மீண்டும் பணம் கேட்கிறாரே என்பதுதான் தயாரிப்பு நிறுவனத்தின் திடுக்கிடலுக்கான காரணம்.
அதனால்,நீங்கள் படமே பண்ணவேண்டாம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்கிற இடத்துக்குத் தயாரிப்பு நிறுவனம் சென்றுவிட்டதாம்.
இதனால் இப்போது வேறு ஏதாவதொரு கதாநாயகனோடு இணைந்து உங்களுக்கு ஒருபடம் இயக்குகிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறாராம் வெங்கட்பிரபு.











