பிரியங்கா மோகன் தவறாகச் சித்தரிக்கப்பட்டதன் பின்னணி இதுவா? – உலவும் தகவல்
கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர்,டான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர்.சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுசுடன் கேப்டன் மில்லர், ரவிமோகனுடன் பிரதர் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மையில் வெளியான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஓஜி’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் இடம்பெறுவதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்தப் புகைப்படங்களில் இருப்பது நான் அல்ல என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்…
என்னைத் தவறாகச் சித்தரிக்கும் சில ஏஐ (AI) படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். ஆக்கபூர்வமான படைப்பாற்றலுக்காக ஏஐ பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தவறான விசயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. எதை உருவாக்குகிறோம், எதைப் பகிர்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா மோகனைத் தவறாகச் சித்தரிக்கும் படங்கள் வெளியானதின் பின்னணியில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஜெகதீஷ்தான் இருக்கிறார் என்றொரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.
அவர்,நடிகை பிரியங்கா மோகனுக்கு மேலாளராகப் பணியாற்றினாராம்.ஒருகட்டத்தில் அவருடைய செயல்பாடுகள் பிடிக்காமல் அவரை மேலாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார்.
அதனால் கோபமான ஜெகதீஷ், அப்போதிருந்து நடிகை பிரியங்கா மோகனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அவரால், தமிழில் சில முக்கியமான படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று ஏற்கெனவே புலம்பிக் கொண்டிருந்த பிரியங்கா மோகன், இப்போது பட வாய்ப்புகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் தன்னை அசிங்கப்படுத்துகிற வேலைகளில் ஜெகதீஷும் அவர் நடத்தும் தி ரூட் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
மேலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதால் மட்டும் இவ்வளவு கோபமா? அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்கிற ஐயத்தைத் திரையுலகில் பலர் எழுப்பி வருகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.











