சினிமா செய்திகள்

விஜய் 69 இல் நடிக்க சத்யராஜ் மறுப்பு – காரணம் என்ன?

எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை செப்டம்பர் 4 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது.ஒரு பாடலைப் படமாக்கியதோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கிறது.அதற்காக இரண்டு மாதங்கள் விஜய் ஒதுக்கியுள்ளார்.அதுவரை கட்சிப் பணிகளுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

இந்நிலையில்,இப்படத்தில் இருக்கும் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகர் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.ஏற்கெனவே விஜய்யுடன் தலைவா,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சத்யராஜ்.

அதன்காரணமாக இந்தப்படத்திலும் நடிக்கக் கேட்டு அவரை அணுகினார்களாம்.ஆனால் இந்தப்படத்தில் நடிக்க விருப்பமில்லையென்று சொல்லிவிட்டாராம் சத்யராஜ்.

அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவற்றில் ஒன்று…

விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார்.இந்தப்படத்தில் நேரடியாகவோ இல்லாவிட்டால் மறைமுகமாகவோ அவரையும் அவருடைய கட்சியையும் போற்றிப் புகழும் வண்ணம் வசனங்களோ காட்சிகளோ இடம்பெறும் அல்லது பின்னணியில் அவருடைய கட்சிக் கொடியையோ பதாகையையோ வைத்துவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இருக்கும்போது அவருடைய கட்சியை விளம்பரத்துகிற மாதிரி நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தே அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இது உண்மையா? என அவர் தயாரிப்பில் விசாரித்தால் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.அது என்னவெனில்…

இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டு இயக்குநர் எச்.வினோத் பேசினார். படத்தின் கதையும் அதில் சத்யராஜ் சார் கேரக்டரும் நன்றாகவே இருந்தன.சாருக்கும் அதில் நடிக்க விருப்பம்தான்.ஆனால்,சம்பள விசயம் ஒத்துவரவில்லை.சார் இப்போது நடிக்கும் படங்களில் வாங்கும் சம்பளத்தைக் கேட்டார்.அதர்கு எங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அதனால் சார் நடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

விஜய் நடிக்கும் படத்தில் சின்னப்படங்கள் போல் பட்ஜெட் இல்லை என்று சொல்லியிருப்பது வியப்பாக இருக்கிறது.நம்ப முடியாததாகவும் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டோருக்கே வெளிச்சம்.

Related Posts