ஓவியா ஆர்மி மீது போலிஸில் புகார் – காயத்ரி ரகுராம் எச்சரிக்கை
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும் அதன் தாக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.
இவரை ‘அக்கா… அக்கா…’ என ஜூலி பாசத்துடன் அழைப்பார். ஓவியாவுக்கு எதிராகப் பேசியதால் ஓவியா ஆர்மியின் கோபத்துக்கு இவர்கள் ஆளானார்கள்.
இந்நிலையில், ‘என்னைப் பற்றியோ, ஜூலியைப் பற்றியோ கிண்டலடித்தால் போலீஸில் புகார் செய்வேன்’ என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
நேற்று வெளியிட்ட ட்வீட்டில், “சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது, கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டுவது போன்றவை இன்றே முடிவுக்கு வரவேண்டும். இல்லையென்றால், போலீஸில் புகார்செய்து உங்களைக் கண்டுபிடிப்பேன்.
அது தனிநபராக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி. என்னைப் பற்றியோ அல்லது ஜூலியைப் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியோ இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் இரண்டாம்பாகம் வரும்வரை இந்தச் சிக்கலும் நீடிக்கும் போல.











