சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் பிரதீப்ரங்கநாதன் படத்தில் திடீர்மாற்றம்

கோமாளி படத்தை இயக்கி அப்பட வெற்றிக்குப் பின் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் பிரதீப்ரங்கநாதன்.

அடுத்து அவர் நடிகராக மட்டும் களமிறங்கவிருக்கிறார். விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கிறார்.

இந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதற்காக, தனி அலுவலகம் போட்டு முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அண்மையில் நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டு அவரோடு புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார் விக்னேஷ்சிவன்.

அதனால், இப்படம் தொடங்கும் அறிவிப்பு விரைவில் வருமென்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், அதில் திடீர்மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.அது இப்போது வெளிவந்திருக்கிறது.

முன் தயாரிப்புப் பணிகளின்போதே ராஜ்கமல் நிறுவனத்துடன் விக்னேஷ்சிவனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.அதனால் படத்தை அந்நிறுவனத்திலிருந்து வெளியில் எடுத்துவிட்டாராம். அப்போது, தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

இப்போது அந்தப்படத்தை லியோ படத்தைத் தயாரித்த செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். ஏற்கெனவே அந்த நிறுவனத்தில், விஜய்சேதுபதி,நயன்தாரா,சமந்தா உள்ளிட்டோர் நடித்த காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ்சிவன்.அந்தத் தொடர்பின் விளைவாக இப்படம் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்குப் போயிருக்கிறது.

விக்னேஷ்சிவன் இயக்கம் பிரதீப் நடிப்பு ஆகியனவற்றோடு இன்னும் பலமான கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது.படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். முக்கியவேடத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

பிரதீப், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ்சிவன் ஆகிய மூவருமே இரட்டைஅர்த்த வசனங்களில் புகழ்பெற்றவர்கள். இந்த மூவரும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

என்னென்னவெல்லாம் பேசப்போகிறார்களோ?

Related Posts