செய்திக் குறிப்புகள்

ஆக்‌ஷன் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் – தெறிக்கும் ரெபல் டீசர்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதியபடம் ‘ரெபல்’.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் உடன் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, படத் தொகுப்புப் பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.இதனை நடிகர் சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

டீசரில்,முழுநீள ஆக்‌ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
அவருடைய தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும், அறிமுகக் காட்சியில் அவர் பேசும் வசனமும் இரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் இரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இதன் காரணமாக ‘ரெபல்’ படத்தின் டீசர் குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது

டீசர் காண….

Related Posts